கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் இன்று தேர்த் திருவிழா

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) தொடங்கவுள்ளது.

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) தொடங்கவுள்ளது.
ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம சாந்தி, நகர சோதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை (செப்டம்பர் 25) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை, கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு அன்னபட்சி வாகனத்திலும் கஸ்தூரி அரங்கநாதர் காட்சியளிக்கிறார். செப்டம்பர் 26 முதல் 30-ஆம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. அக்டோபர் 1-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி திருத்தேர் எழுந்தருளுதல், 9.05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 2, 3-ஆம் தேதி காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம், அக்டோபர் 4-ஆம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com