வங்கி ஊழியரைக் கட்டிப் போட்டு ரூ. 3 லட்சம் தங்க நகை கொள்ளை

பவானியை அடுத்த சித்தோடு அருகே வங்கி ஊழியரைக் கட்டிப் போட்டு மர்ம நபர்கள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம்

பவானியை அடுத்த சித்தோடு அருகே வங்கி ஊழியரைக் கட்டிப் போட்டு மர்ம நபர்கள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
சித்தோடு, குமிளம்பரப்பு, சர்க்கரைக் கிடங்கு, பல்லக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (55). தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முகவராகப் பணியாற்றும் இவர், தனது மனைவி பூங்கொடி (50), தாய் வள்ளியம்மாள், மகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் பழனிசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம், நகைகளைத் தருமாறு மிரட்டி உள்ளனர். மேலும், பழனிசாமி, பூங்கொடியைக் கட்டிப் போட்டதோடு, அவர்களின் செல்லிடப்பேசிகளையும் உடைத்து வீசியுள்ளனர். தொடர்ந்து, பூங்கொடி அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்பட 15 பவுன் தங்கம், ரொக்கம் ரூ. 13 ஆயிரத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, சித்தோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரிப் பேராசிரியர் வீட்டில்....: பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (50). இவரது மனைவி சங்கீதா (42). குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக இருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் வீட்டின் பூட்டை வெள்ளிக்கிழமை உடைத்து, பீரோவிலிருந்த 19 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவர்களின் வீட்டிலிருந்து இருவர் வெளியேறிச் சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com