நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் விநியோகிக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா அருகே உள்ள கிராமங்களுக்கு முகாசி அனுமன்பள்ளி மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட தண்ணீபந்தல்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா அருகே உள்ள கிராமங்களுக்கு முகாசி அனுமன்பள்ளி மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட தண்ணீபந்தல் துணை மின் நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்துள்ள மனு:
 முகாசி அனுமன்பள்ளி மின் பகிர்மானத்துக்கு உள்பட்ட ராயபாளையம், சின்னத் தொட்டிபாளையம், கொத்துமுட்டிபாளையம், சென்னிப்பாளி, ஆதி காலனி, மைலாடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம், சிறு தொழில்கள் பிரதானமாக உள்ளன.   மேலும், சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு ஆழ்துளைக்  கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகமும் செய்யப்படுகிறது.  இவை யாவும் மும்முனை மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகின்றன. ஆனால், மொடக்குறிச்சி தாலுகா அருகே உள்ள எங்கள் கிராமங்களுக்கு ஷிப்ட் முறையில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை மும்முனை மின் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் மின்சாரம்  அழுத்தம் குறைவாக கிடைக்கும் காரணத்தால் விவசாயம், இதர தொழில்கள் பெருமளவில் பாதிப்படைகின்றன. 
 எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள குமாரவலசு ஊராட்சிக்கு உள்பட்ட தண்ணீர்பந்தலில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் நிலையம் அமைந்துள்ள இடத்தை விவசாயிகள், தொழில் செய்பவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து, அந்த இடத்துக்கு விலை நிர்ணயம் செய்து மின்சார வாரியத்துக்கு தானமாக கிரயம் செய்து கொடுக்கப்பட்டது.  
 எனவே, தண்ணீர்பந்தல் துணை மின் நிலையத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கி விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com