ஈரோடு கறவை மாட்டுச் சந்தை:  ரூ. 2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகள் ஆகியவை ரூ. 2.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகள் ஆகியவை ரூ. 2.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.
 ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச்சாவடி  அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.  வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கடும் மழையின் காரணமாக கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திரம், தெலங்கானா, தமிழக வியாபாரிகளின் வருகை அதிகமாக இருந்தது. மேலும், கடந்த வாரத்தைவிட  விவசாயிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.
 இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
 வெளிமாநில வியாபாரிகள், விவசாயிகளின்  வருகை குறைவாகவே காணப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள், விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் சந்தைக்கு வந்திருந்தனர். 
  இந்த வாரச்  சந்தையில் 300 பசு மாடுகள், 250 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன.  இதில், பசுமாடு 
ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ. 18 ஆயிரம் 
முதல் ரூ. 34ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 2 ஆயிரம்   முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன. மொத்தம், சுமார் ரூ. 2.5 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com