"விடாமுயற்சியுடன் ஆழ்ந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம்'

விடாமுயற்சியுடன் ஆழ்ந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.வாசுதேவன் பேசினார்.

விடாமுயற்சியுடன் ஆழ்ந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.வாசுதேவன் பேசினார்.
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் செயல்படும் பாரதி வாசகர் வட்டத்தில், கோவை ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயிற்றுவிப்பு மையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி-4 போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்று தேர்வு எழுதியவர்களில் வெற்றி பெற்ற 15 பேருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.வாசுதேவன் பேசியதாவது:
முடியும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான சரியான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். பலமுறை தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. குறைந்த மதிப்பெண்களில் வெற்றிக்கான வாய்ப்பு தவறிவிடுவதைப் பற்றி கவலைப்படக் கூடாது. போட்டித் தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவதே. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாகப் படித்தால் எந்தப் போட்டித் தேர்வையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்றார். 
இதில், மணி கல்லூரிப் பேராசிரியர் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு)அண்ணாதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.சுப்பிரமணியன், அம்பேத்கர் கல்வி இயக்கம் கணேஷ், கூட்டுறவுத் துறை இளநிலை தணிக்கையாளர் பிரபு ஆகியோர் காண்டு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கினர். கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com