தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கக் கூட்டம்

தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்க பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்க பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 சட்ட ஆலோசகர் கோ.தர்மையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  
 பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பதிவில்லாத பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்காகவே பாரம்பரிய சித்த மருத்துவ நல வாரியம் அமைக்கப்பட்டது.
 இந்நிலையில், பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு ஈரோடு மாவட்ட தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் வேதனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. வட்டாட்சியரின் இருப்பிட விசாரணை அடிப்படையில் சான்று பெற்று பதிவுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சித்த மருத்துவர்களுக்கு என்லிஸ்ட்மென்ட் பதிவு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதில், மாநிலத் தலைவர் சித்தரடி மு.தணிகாசலம், புளியறை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் திருப்பூர் ஆ.அருணாசலம், நிர்வாகிகள் ஏ.எல்.ராஜு, சி.லோகநாதன், இளங்கோவன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com