ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கு பிப். 17-இல் இலவசப் பயிற்சி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 17-இல் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது.    

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 17-இல் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது.    
இதுகுறித்து, அக்கல்லூரியின் முதல்வர் ஆர்.வெங்கடாசலம் வெளியிட்ட தகவல்:
கல்லூரியின் ஐ.ஏ.எஸ். அகாதெமியும், ஈரோடு பாரதி பயிற்சி மையமும் இணைந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 11-இல் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில்  இங்கு பயிற்சி பெற்ற 96 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 17- ஆம் தேதியிலிருந்து  தமிழ்நாடு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு, காவலர், உதவி ஆய்வாளர் ஆகிய தேர்வுகளுக்கு தனித்தனியாக இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களைக் கொண்டு  நடத்தப்படும் சிறப்பைப் பெற்றுள்ள இப்பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறு, அனைத்து அரசு விடுமுறை நாள்களிலும்  நடைபெறவுள்ளது.
அனைத்துப் பாடங்களும் எளிய முறையிலும், தொடர்ச்சியான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். காவலர், உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு  உடல் தகுதிக்கான தேர்வு, பயிற்சியும் அளிக்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பிப்ரவரி 17- ஆம் தேதி காலை 10 மணிக்கு  ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி  வளாகத்தில் உள்ள கலையரங்குக்கு வர வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 75982-25040, 79047-90618 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com