சிவராத்திரி: ஈரோடு கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் உள்பட  பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடியும் வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் உள்பட  பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடியும் வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மகாசிவராத்திரி விழாவையொட்டி, இரவு 7 மணிக்கு முதல் கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.
முதல் கால யாக பூஜையில் 108 கலசம், இரண்டாம் கால யாக பூஜையில் 11 கலசம், மூன்றாம் கால யாக பூஜையில் 55 கலசம், நான்காம் கால யாக பூஜையில் 75 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடைபெற்றது.
யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றவுடன் கலச தீர்த்தங்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு முழுவதும் விழித்திருந்த பக்தர்களின் விரதத்துக்கு உதவிடும் வகையில், சிவன்மலை சந்திரசேகர ஓதுவார்கள் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி விடியும் வரை நடைபெற்றது. சிவராத்திரி விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com