சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
 விழாவையொட்டி, 4 கால பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜை மாலை 6 மணிக்கும், 2-ஆம் கால பூஜை இரவு 10 மணிக்கும், 3-ஆம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், 4-ஆம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்றது. 
 இதில், திரளான பக்தர்கள் விரதம் இருந்து விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.  முத்தமிழ் மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னிமலை, மேற்கு புதுப்பாளையம், அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
சென்னிமலை முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஷ்வரர் கோயில், மருதுறை ஈஸ்வரன் கோயில், சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயில், எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில், பெருந்துறை, வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com