நான்கு தேசிய விருதுகளை வென்ற கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள்

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் உள்பட சிவில் துறை மாணவர்கள் தேசிய அளவிலான தொழில்நுட்பப் போட்டிகளில் 4 விருதுகளை வென்றுள்ளனர்.

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் உள்பட சிவில் துறை மாணவர்கள் தேசிய அளவிலான தொழில்நுட்பப் போட்டிகளில் 4 விருதுகளை வென்றுள்ளனர்.
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள செயின்ட் டிஜிட் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளில் சிருஷ்டி 18  எனும் தேசிய அளவிலான அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி நடத்தப்பட்டது. 
அதில், கொங்கு பொறியியல் கல்லூரியின் சிவில் துறை (கட்டுமானம்) மாணவர்கள் மு.திவாகர், வி.பாலகார்த்திகேயன், வெ.கெளதம், நா.பாலாஜி, பொ.துர்க்கைராஜா, மு.பரதீன்கான், வழிகாட்டி இணைப் பேராசிரியர் கோ.க.பிரதீப்குமார் ஆகியோர் பங்கேற்று இஞ2 நங்வ்ன்ங்ள்ற்ங்ழ் டழ்ர்த்ங்ஸ்ரீற்-என்ற அறிவியல் கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி நடுவர்களிடம் விளக்கமளித்தனர். 
இந்தக் கண்டுபிடிப்பு சிறப்பிடம் பிடித்து ரூ. 1 லட்சம் ரொக்கம், விருதுகளையும், சிறந்த கண்டுபிடிப்புக்கான ரூ. 12 ஆயிரம் பரிசுத் தொகையையும் வென்றனர். சிறந்த வழிகாட்டிக்கான விருதை இணைப் பேராசிரியரும் பெற்றார்.
இதே குழு மாணவர்கள் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 2-இல் நடைபெற்ற  துருவா 18 - போட்டிகளில் பங்கேற்று ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வென்றுள்ளனர்.
தேசிய அளவிலான விருதுகளை வென்ற மாணவர்கள், இணைப் பேராசிரியருக்கு கல்லூரி நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com