பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.சங்கமேஸ்வரன்  தலைமை  வகித்தார். நிர்வாகிகள் பிரபாத் சி.மகேந்திரன், கே. மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.சீனிவாசன் வரவேற்றார். 
பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் ஆ.தியாகராசன், நாட்டியாஞ்சலி  நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தும், சிவராத்திரியின் சிறப்புகள், வழிபாடுகள் குறித்தும்  விளக்கிப் பேசினார். பவானி ஸ்ரீசம்பூர்ணா நாட்டியாலயம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 10-க்கும் மேற்பட்ட சிறுமியர் பல்வேறு பாடல்களுக்கு நாட்டியம் ஆடினர்.  மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். நாட்டியப் பயிற்சியாளர் யூ.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com