பேருந்துக் கட்டண உயர்வு: அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக் கூட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, ஈரோட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, ஈரோட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் வண்டிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர்  கே.துரைராஜ் பேசியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அவர்கள் சேர்த்து வைத்த பி.எப். பணத்தையும், ஊதிய பலன்களையும், சம்பள பாக்கி, விடுமுறை பாக்கிகளையும் பெற முடியாமல் ஆண்டுக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பணியில் இருக்கும் தொழிலாளர்களை விட ஓய்வு பெற்றவர்கள் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால்தான் சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கி உள்ளது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 7 அல்லது 10-ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும். அதைக் கூட கொடுப்பதில்லை. 
இந்நிலையில், அவசரகதியில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். அரசு மக்களுக்காக இருக்கிறதாக இருந்தால் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும்  போக்குவரத்து சாதனங்கள், கல்வி, பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மாநில, மத்திய அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றார்.   
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com