ரூ. 12.62 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் ஏல விற்பனை

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளை பொருள்கள் ரூ. 12.62 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின. 

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளை பொருள்கள் ரூ. 12.62 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின. 
இங்கு விற்பனைக்கு வந்த 4,877 தேங்காய்களில் சிறியவை ரூ. 9.10-க்கும், பெரியவை ரூ. 19.50 வரையிலும் மொத்தம் ரூ. 60,349-க்கு ஏலம் போனது. 36 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ குறைந்த விலையாக ரூ. 86.90-க்கும், அதிக விலையாக ரூ. 135.59-க்கும் என மொத்தம் ரூ. 60,015-க்கும் விற்பனையானது.
90 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 10.05 முதல் ரூ. 10.70 வரையில் மொத்தம் ரூ. 95,236-க்கும், 701 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 35.51 முதல் ரூ. 40 வரையில் மொத்தம் ரூ. 8,33,317-க்கும், 5 மூட்டைகள் கொள்ளு கிலோ ரூ. 31.89 என மொத்தம் ரூ. 13,872-க்கும், 4 மூட்டைகள் எள் கிலோ ரூ. 80.96 முதல் ரூ. 86.59 வரையில் மொத்தம் ரூ. 14,903-க்கும் விற்பனையானது. 
56 மூட்டைகள் துவரை கிலோ ரூ. 35.09 முதல் ரூ. 39.29 வரையில் மொத்தம் ரூ. 1,75,495-க்கும், ஒரு முட்டை நரி பயிர் கிலோ ரூ. 38.69 என மொத்தம் ரூ. 4,023-க்கும், 2 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ. 34.19 முதல் ரூ. 40.89 என மொத்தம் ரூ. 5,478-க்கும் ஏலம் போயின. மொத்த வர்த்தகம் ரூ. 12,62,688. 
 அந்தியூரில்... 
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்த வர்த்தகம் ரூ. 59.12 லட்சத்துக்கு நடைபெற்றது. 
இங்கு 19,265 தேங்காய்கள் சிறியவை ரூ. 9.50-க்கும், பெரியவை ரூ. 25-க்கும் என மொத்தம் ரூ. 2,72,659-க்கு ஏலம் போயின. 60 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 123.39 முதல் ரூ. 137.89 வரையில் மொத்தம் ரூ. 2,18,480-க்கும், 1,440 மூட்டைகள் துவரை கிலோ ரூ. 36.35 முதல் ரூ. 43.70 வரையில் மொத்தம் ரூ. 51,79,470-க்கும், 16 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 10.82 முதல் ரூ. 12.59 வரையில் மொத்தம் ரூ. 17,814-க்கும் ஏலம் போயின. 
60 மூட்டைகள் நரிப் பயறு கிலோ ரூ. 46.69 முதல் ரூ. 57.49 வரையில் மொத்தம் ரூ. 1,97,113-க்கும், 13 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ. 38.16 முதல் ரூ. 48.15 வரையில் மொத்தம் ரூ. 13,201-க்கும், 3 மூட்டைகள் ஆமணுக்கு கிலோ ரூ. 38.29 முதல் ரூ. 49.69 வரையில் மொத்தம் ரூ. 5,700-க்கும், 3 மூட்டைகள் அவரை கிலோ ரூ. 42.15 முதல் ரூ. 48.15 வரையில் மொத்தம் ரூ. 2,498-க்கும், பாசி பயிறு 2 மூட்டைகள் கிலோ ரூ. 48.76 முதல் ரூ. 68.78 வரையில் மொத்தம் ரூ. 1,936-க்கும் விலை போயின. 
ஒரு மூட்டை எள் கிலோ ரூ. 86.59 என மொத்தம் ரூ. 4,069-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.59,12,940-க்கு விளைபொருள்கள் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com