ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் கொடியேற்றம்

கே.என்.பாளையம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவையொட்டி, கோயிலில் 75 அடி உயர மூங்கில் கொண்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.என்.பாளையம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவையொட்டி, கோயிலில் 75 அடி உயர மூங்கில் கொண்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் காவடி ஆட்டம் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து 75 அடி உயரமுள்ள மூங்கிலை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்து வந்தனர். கொடிவேரி பவானி ஆற்றில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து ஆற்றில் இருந்து ஊர்வலமாக புதன்கிழமை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்து பவானி ஆற்றுக்குச் சென்று அங்கு வழிபாடு நடத்தினர்.  அங்கிருந்து மலைவாழ் மக்களின் பீனாட்சி  வாத்தியம், தாரை தப்பட்டை அடித்து மேளதாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்குச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com