கீழ்பவானி விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கொடுமுடி அருகே சிவகிரியில் கீழ்பவானி பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொடுமுடி அருகே சிவகிரியில் கீழ்பவானி பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் வரவேற்றார்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:
 உச்சநீதிமன்ற ஆணைக்குப் புறம்பாக தமிழக அரசு பவானிசாகர் அணையில்  இருந்து  தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. தற்போது பவானிசாகர் அணையில் 81/2 டிஎம்சி தண்ணீரும், மேல் மின் அணையில் 7 1/2 டி.எம்.சி தண்ணீரும் என மொத்தம் 16 டி.எம்.சி தண்ணீர் இருப்பில் உள்ளது.  எனவே, 11 டி.எம்.சி. தண்ணீரை எடுத்து பாசனத்துக்குப் பயன்படுத்தலாம். இதைக் கருத்தில் கொண்டு முறை நீராகப் பிரித்து 4 முறை சென்னசமுத்திரம் இரண்டாம் படை மாதத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு திறந்துவிட  நடவடிக்கை  எடுக்க வேண்டும். 
 தண்ணீர் திறப்புக்கான தேதியை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க பாசனத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com