துப்பாக்கி உரிமத்தைப் பதிவு செய்ய மார்ச் 31 வரை காலக்கெடு 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமங்கள், உரிமைதாரருடைய விவரங்களை அரசிடம் பதிவு செய்ய மார்ச் 31- ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமங்கள், உரிமைதாரருடைய விவரங்களை அரசிடம் பதிவு செய்ய மார்ச் 31- ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்:
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமங்கள், உரிமைதாரரது விவரங்கள் அனைத்தும் தேசிய படைக்கல உரிமங்களுக்கான தரவு தள மென்பொருளில் சஹற்ண்ர்ய்ஹப் ஈஹற்ஹக்ஷஹள்ங் ர்ச் அழ்ம்ள் கண்ஸ்ரீங்ய்ஸ்ரீங்ள் (சஈஅக) / அழ்ம்ள் கண்ஸ்ரீங்ய்ஸ்ரீங் ஐள்ள்ன்ஹய்ஸ்ரீங் நஹ்ள்ற்ங்ம் (அகஐந) -இல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   
 மேற்படி படைக்கல உரிமங்கள் குறித்த பதிவுகள் மேற்கொள்ளாத படைக்கல உரிமதாரர்களுக்கு எதிர்வரும் 31.3.2018-ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு மத்திய அரசால் இறுதி வாய்ப்பாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 எனவே, துப்பாக்கி உரிமதாரர்கள் எவரேனும் தங்களது உரிமத்தைப் பதிவு செய்யாமல் இருப்பின் அசல் படைக்கல உரிமம், இருப்பிட முகவரிக்கான ஆதாரம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1, பான் கார்டு ஆகியவற்றின் அசல் பிரதிகளுடன் மார்ச் 24-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள "சி'- (குற்றவியல்) பிரிவில் ஒப்படைத்து, படைக்கல உரிமத்தின் தேசியத் தரவு தளத்தில் பதிவு செய்து தனித்த அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம்.
 மேற்படி விவரங்களை அளிக்காவிட்டால் உரிமங்கள் தேசிய படைக்கல உரிமங்களுக்கான விவரங்கள் தரவு தள மென்பொருளில் பதிவாகாமல் காலாவதியாக நேரிடுவதுடன், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேற்படி உரிமங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடும்.
 எனவே, இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இறந்துபோன படைக்கல உரிமதாரர்களது வாரிசுதாரர்கள் மேற்படி உரிமத்துக்கான படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற ஆர்மரியிலோ ஒப்படைத்து, அசல் உரிமம், வாரிசு சான்று, இறப்புச் சான்று ஆகியவற்றுடன் ரத்து செய்யக் கோரும் விண்ணப்பத்தை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தவறும்பட்சத்தில் படைக்கலச் சட்டம், விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com