மூத்த சோஷலிசவாதி எழுமாத்தூர் சென்னியப்பன் காலமானார்

மூத்த சோஷலிசவாதியும், கீழ்பவானி பாசன அமைப்புகளின் தள கர்த்தர்களில் முக்கியமானவருமான எழுமாத்தூர் மு.சென்னியப்பன் (90) வியாழக்கிழமை (ஜனவரி 11) காலமானார்.

மூத்த சோஷலிசவாதியும், கீழ்பவானி பாசன அமைப்புகளின் தள கர்த்தர்களில் முக்கியமானவருமான எழுமாத்தூர் மு.சென்னியப்பன் (90) வியாழக்கிழமை (ஜனவரி 11) காலமானார்.
 இவருக்கு மனைவி பழனியம்மாள், மகன் சண்முகம், மகள்கள் கொண்டியம்மாள், பாவாத்தாள் ஆகியோர் உள்ளனர்.
 இவர், கீழ்பவானி பாசன அமைப்புகளை உருவாக்க அரும்பணியாற்றி கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். களத்துமேடு எனும் விவசாயிகள்  சங்க இதழையும், பாசன மேலாண்மை இதழையும் ஈரோட்டிலிருந்து நடத்தியவர். சிறந்த கருத்துரையாளர். இவர், எழுமாத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
 இவரது,  இறுதிச் சடங்கில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலர் செ.நல்லசாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com