ஈரோட்டில் பொங்கல் பானை விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. சிறிய பானை முதல் பெரிய பானை வரை உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகைக்காக ஈரோடு மாநருக்கு எடப்பாடி, துறையூர் பகுதிகளில் தயாரான பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் களி மண்ணால் தயாரிக்கப்பட்ட பொங்கல் பானைகள் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பானைகளின் விலை ரூ. 70 முதல் ரூ. 350 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, மண் பானை விற்பனையாளர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாவே பானை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கி விடுவோம். பொதுமக்களிடையே மண் பானையில் பொங்கலிடும் ஆர்வம் குறைந்துவிட்டதால் விற்பனையும் குறைந்து வருகிறது. இதனால், பானை தயாரிப்புத் தொழிலும் நலிவடையும் நிலை உருவாகியுள்ளது. பொங்கல் விழாவுக்கு 5 நாள்களுக்கு முன்னதாக விற்பனை விறுவிறுப்படையும். ஒரு படி அரிசி பொங்கும் பானை ரூ. 70, 2 படி அரிசி பொங்கும் பானை ரூ. 110, 3 படி அரிசி பொங்கும் பானை ரூ. 150 என்ற விகிதத்தில் விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com