உகினியம் பழங்குடி மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருள்கள்

சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தை, வாசவி தங்க நகை மாளிகை நிறுவனம் தத்தெடுத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருகள்களை சனிக்கிழமை வழங்கியது.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தை, வாசவி தங்க நகை மாளிகை நிறுவனம் தத்தெடுத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருகள்களை சனிக்கிழமை வழங்கியது.
சத்தியமங்கலத்தை அடுத்த உகினியம் வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள இக்கிராம மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள், பழங்குடியினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வழங்குவதற்கு சத்தியமங்கலம் வாசவி தங்க நகை மாளிகை கிராமத்தை தத்தெடுத்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் துறை, அதிரடிப் படை, வாசவி தங்க நகை மாளிகை ஆகியவை சார்பில் வனப் பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமார், அதிரடிப் படை கண்காணிப்பாளர் பாண்டிராஜ் ஆகியோர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு, கரும்பு, புத்தாடை வழங்கினர். பழங்குடியின மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், குளிர்கால கம்பளி, ஆரம்பப் பள்ளிக்கு டேபிள், சேர் ஆகியன வழங்கப்பட்டன.
மேலும், பழுதடைந்த வீடுகளைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, கல்லூரி படிப்பு வரை பழங்குடியின மக்களுக்குத் தேவையான செலவுகளை இந்நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத இக்கிராமத்துக்கு தனி வேன் ஏற்பாடு செய்வதாகவும், பிற பகுதிகளுடன் இக்கிராமத்தை இணைத்து போக்குவரத்து வசதி செய்வதால் இங்கு விளையும் காய்கறி, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்தி பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்துவது எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com