சென்னிமலை முருகன் கோயிலில் மார்கழி மாத நிறைவு பூஜை

சென்னிமலை முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மார்கழி மாத நிறைவு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னிமலை முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மார்கழி மாத நிறைவு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் மார்கழி மாத விழாக் குழுவினர் சார்பில், மார்கழி 1 ஆம் தேதி சிறப்பு வழிபாடு தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னர், மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. அப்போது பசுவுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து,
விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மார்கழி மாத விழாக் குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com