காணும் பொங்கல்: மாடுகளைத் தயார் செய்யும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள காணும் பொங்கலுக்காக மாடுகளைத் தயார் செய்யும் பணிகளில் மாட்டு வண்டிக்காரர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள காணும் பொங்கலுக்காக மாடுகளைத் தயார் செய்யும் பணிகளில் மாட்டு வண்டிக்காரர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
 ஆண்டு முழுவதும் உழைக்கும் கால்நடைகளுக்க நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் திங்கள்கிழமை மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்களது வீட்டில் கட்டியிருந்த கால்நடைகளை நீர்நிலைகளுக்குக் கொண்டு சென்று நீராட்டி, கால்நடைகளின் கொம்புகளுக்குத் தங்களுக்குப் பிடித்த வர்ணம் பூசி திலகமிட்டு, மாலை அணிவித்தனர். அதேபோல, மாட்டுத் தொழுவத்தையும் சுத்தம் செய்து அலங்கரித்தனர். மாலையில் பொங்கல் படைத்து வழிபட்டனர்.  ஈரோடு, காவிரிக்கரையில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிகாலையிலேயே மாடுகளைக் கொண்டு வந்து கொம்புகளை சீவி நீராட்டி வர்ணம் பூசினர். அதேபோல மாட்டு வண்டிகளுக்கும் வர்ணம் பூசி அழகுபடுத்தினர். 
 காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுமிகள் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கூடி உற்சாகமாகக் கொண்டாடவுள்ளனர். இதையொட்டி,  வ.உ.சி. பூங்கா சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com