கூட்டுறவு நிலையத்தில் மேலாண்மை பட்டயப் பயிற்சி

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.பார்த்திபன்  வெளியிட்ட  தகவல்:
 ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் நடத்தும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இதற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விரைவில் துவக்கப்படவுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்கள் கட்டாயமாக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் நடத்தும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் "கூட்டுறவு மேலாண்மை' பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அரசு விதியாகும். 
 இப்பயிற்சியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சியோடு கணினி பயிற்சியும், நகை மதிப்பீட்டாளர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு தனியே பட்டயச் சான்றிதழும், கணினி பயிற்சிக்கு தனியே சான்றிதழும், நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு தனியே சான்றிதழும் ஆக மொத்தம் மூன்று சான்றிதழ்கள் இந்த ஒரே பயிற்சியில் வழங்கப்படுவதால் இப்பயிற்சி பெறுவோருக்கு கூட்டுறவு, பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் வேலை பெற அதிக வாய்ப்புள்ளது.
 இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார வேலை நாள்களில் காலை 9 முதல்  பிற்பகல் 1.30 மணி வரை 36 வாரங்கள் நடைபெறும். பிளஸ் 2, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.  பயிற்சியில் சேர 1.7.2018 அன்று 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.  அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
 இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஈரோடு கூட்டுறவு மேலாண் நிலையம், 5, வாய்க்கால்மேடு, எஸ்.வி.என். பள்ளி பின்புறம் கொங்கம்பாளையம், சித்தோடு அஞ்சல், ஈரோடு - 638 102 என்ற முகவரியில் நேரில் அணுகி விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
 விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 25 ஆகும். பயிற்சிக் கட்டணம் ரூ. 14, 850-ஐ நேரடியாக பயிற்சி நிலையத்தில் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424 - 2535632, 97919 - 62646, 94439 - 90632 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com