ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்

ஈரோட்டில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ஈரோட்டில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வழிகாட்டுதலில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எ.சுரேஷ் தலைமை வகித்தார். 
மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் முகாமைத் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செல்வகுமார், குழந்தைகளின் உரிமைகள் குறித்துப் பேசினார். முகாமில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், புறக்கணித்தலை எதிர்கொள்ளும் வகையில் வலிமை மிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும். 
குழந்தைகளுக்கான உரிமைகள், பாதுகாப்பு, பாராமரிப்புத் தேவைப்படும்போது அவசர தொலைபேசி சேவை 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமை, கைவிடப்பட்ட குழந்தைகள், பள்ளி இடைநின்றல், கடத்தல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தல் உள்ளிட்டவையில் இருந்து பாதுகாக்க உதவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 முகாமில், மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com