மாவட்டத்தில் தொடர் நடவடிக்கைகளால் விபத்துகள் குறைவு: காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் தகவல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் கடந்த

ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் முழுவதும் வழக்குப் பதிவுகள் இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. இதனால், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது மீண்டும் அதே நபர் புகார் அளித்தால் இணையத்தில் தெளிவாகத் தெரியும். அவசர உதவிக்கு 100 எண் மாவட்ட அளவில் செயல்பட்டு வந்தது. தற்போது  மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 100-க்கு அவசர உதவி கேட்டு அழைத்தால் சென்னை காவல் துறை கட்டுபாட்டு அலுவலகத்துக்குச் செல்லும். அங்கிருந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைக்கும்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்படும். இதையடுத்து, காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தகவல் அளிப்பர். இவ்வாறு செல்லும் காவலர்களைக் கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்துக்கு ஈரோட்டிலிருந்து சென்ற 8 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com