ஆள் இல்லா ரயில்வே கடவுப் பாதைகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் சீரமைக்கப்படும்: சேலம் கோட்ட மேலாளர் தகவல்

சேலம் கோட்டத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.

சேலம் கோட்டத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
ஈரோடு ரயில்வே காலனியில் ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை  நடைபெற்றது. இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, அவரது மனைவியும், பள்ளித் தலைவருமான அனிதா வர்மா ஆகியோர் பங்கேற்றனர். 
அப்போது, ரயில்வே காலனியில் குடியிருக்கும் ஊழியர்கள், தங்களது பகுதியில் குடிநீரில் கழிவுகள் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்ததுடன் நிறம் மாறியுள்ள தண்ணீரையும் காட்டினர். 
அவர்களிடம் பேசிய கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, தூய்மையான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மேலும், காவிரி ஆற்றில் பொது மக்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் காவிரியில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. 
ரயில்வே காலனி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த காலத்தைப்போல, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில் 68 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள், ஆகஸ்ட் மாதத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com