எழுமாத்தூரில் குடிநீர்ப் பற்றாக்குறை: பொதுமக்கள் அவதி

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர், பாரதி நகர் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர், பாரதி நகர் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது எழுமாத்தூர், பாரதி நகர். இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு என தனியாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர்த் தொட்டி கட்டி குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு மோட்டார் பழுதடைந்தது. அதுமுதல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் இல்லை.
காவிரி ஆற்று குடிநீர் இணைப்பு மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 20 நாள்களாக காவிரி தண்ணீரும் வருவதில்லை. இதனால், பொதுமக்கள் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள பட்டாஸ்பாளி என்ற இடத்தில் உள்ள அடிபம்பில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: 
குடிநீர் வழங்கப் பயன்படுத்தி வந்த மோட்டார் பழுது ஏற்பட்டு பல மாதங்களாகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பாரதி நகர் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எதுவும் எரிவதில்லை. கேட்டால் போதுமான நிதி இல்லை. அதனால் விளக்குகள் வாங்கவில்லை. நிதி வந்ததும் விளக்குகள் அமைத்துத் தருகிறோம் என்று கூறுகின்றனர். அருகிலேயே விவசாய நிலங்கள் உள்ளதால் இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உயிர்ச் சேதம் ஏற்படும் முன் விளக்குகள் அமைக்க வேண்டும்.
 பழுதடைந்த மோட்டாரை சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com