பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைக் கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 12-ஆவது மாநாடு சத்தியமங்கலத்தில்  மூன்று நாள்கள் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 12-ஆவது மாநாடு சத்தியமங்கலத்தில்  மூன்று நாள்கள் நடைபெற்றது. 
கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். 
பவானிசாகர் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்  பி.எல்.சுந்தரம்  தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன்,  மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன்,  மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ப.பா.மோகன், மாநிலக்குழு உறுப்பினர் சு.மோகன்குமார் ஆகியோர் பேசினர்.
இம்மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இதனால் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும், 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனமும் கேள்விக்குறியாகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக கேரள அரசுடன் பேசி தடுப்பணைகள் கட்டுவதைத் தடுத்திட வேண்டும்.
விவசாயம்  குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி நதி, ஆலைக் கழிவுகள், நகராட்சி திட, திரவக் கழிவுகளால் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். பவானி  காவிரி, நொய்யல் மற்றும் குளம், குட்டைகளில் ஆபத்தான திட, திரவக் கழிவுகள் கலப்பதைத் தடுத்திட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.
மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். 
நிறைவாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கே.ஆர்.திருநாவுக்கரசு மீண்டும் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளார் எஸ்.சி.நடராஜ் வரவேற்றார். பவானிசாகர் ஒன்றியச் செயலாளர் பி.என்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com