மழை வேண்டி 48 நாள்கள் மெளன விரதம்: சென்னிமலையில் 24-ஆவது நாளில் மழை

சென்னிமலை அருகே மழை வேண்டி 48 நாள்கள் சித்தரின் பக்தர் மெளன விரதம் இருந்தார்.

சென்னிமலை அருகே மழை வேண்டி 48 நாள்கள் சித்தரின் பக்தர் மெளன விரதம் இருந்தார். 24-ஆவது நாளில் மழை பெய்ததால், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னிமலை, கிழக்கு புது வீதியைச் சேர்ந்தவர் சரவணசாமி. சித்தர்களின் பக்தரான இவர், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டியும், சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு ஊராட்சி, மணிமலையில் உள்ள கருப்பணசாமி கேயியலில், 48 நாள்கள் மெளன விரதம் இருப்பதாக அறிவித்தார். 
அதன்படி, பிப்ரவரி 18- ஆம் தேதி, தனது மெளன விரதத்தைத் தொடங்கினார். அன்று முதல் தொடர்ந்து, உணவு எதுவும் இல்லாமல், நீர் ஆகாரங்கள் மட்டும் உட்கொண்டு, மலைமேல் உள்ள கருப்பணசாமி கோயிலிலேயே மெளன விரதம் இருந்து வருகிறார். இரவு நேரத்தில் அங்கேயே படுத்துக் கொள்கிறார். 
இந்நிலையில், மெளன விரதத்தின் 24-ஆவது நாளான புதன்கிழமை பகல் 12 மணியளவில், கரூர் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பின் தலைவர் பிச்சைமுத்து தலைமையில், கோயில் பூசாரிகள், சரவணசாமியைச் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும், கருப்பணசாமிக்கு பூஜைகளும் செய்தனர். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில், சென்னிமலை பகுதியில் மழை பெய்ததால், சரவணசாமி, பூசாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏப்ரல் 6 ஆம் தேதி 48-ஆவது நாள் மெளன விரதத்தை சரவணசாமி நிறைவு செய்கிறார். அன்று, கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com