மாநில விளையாட்டுப் போட்டி:  கொங்கு பாலிடெக்னிக் மாணவிகள் முதலிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களிலிருந்து, பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள், வாலிபால் போட்டியில் முதலிடமும், ஹேண்ட்பால், பேட்மிட்டன் போட்டிகளில் இரண்டாம் இடமும், த்ரோபால் போட்டியில் மூன்றாம் இடமும்,  டேபிள் டென்னிஸ் போட்டியில் நான்காம் இடமும் பெற்றனர்.
தடகளப் போட்டிகளில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் வி.ஹெப்சிபா, 800, 1,500 மீட்டர் போட்டிகளில் கே.ராசிகா, 4  * 100 தொடர் போட்டிகளில் மாணவிகள் வி.ஹெப்சிபா, கே.ராசிகா, வி.தரணி, பி.அனிதாபெட்ரீஷியா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். உயரம் தாண்டுதல் போட்டியில் எஸ்.சினேகா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
சிறந்த வீராங்கனை பட்டத்தை வி.ஹெப்சிபா பெற்றார். மேலும், தடகளப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர். இதில், வெற்றி பெற்ற வீராங்கனைகள், தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்னர்.
வெற்றி பெற்ற மாணவிகளை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, முதல்வர் வி.வேதகிரி ஈஸ்வரன், துணை முதல்வர் டி.தாமோதரன், உடற்கல்வி இயக்குநர் கே.எம்.பிரகாஷ்ராஜ், உதவி உடற்கல்வியாளர் கு.ஸ்ரீநாத் மற்றும் துறைத் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com