தேர்வாணையத் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்கள் இணையம் மூலம் சரிபார்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 பணிகளுக்கான தேர்வில்

ஈரோடு மாவட்டத்தில் அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மூலச் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையம் மூலம் 20க்கும் மேற்பட்ட பல வகையான சான்றிதழ்கள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 4ஆம் தேதிக்கு முன் தங்களது மூலச் சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விண்ணப்பதாரர்கள் என்னென்ன சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற குறிப்பாணை, அரசு இ-சேவை மையங்களின் முகவரியுடன் கூடிய பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவன இ-சேவை மையத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மூலச் சான்றிதழ்களைப் பதிவேற்றும் பணியை ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஏப்ரல் 23இல் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 117 பேரும், அந்தியூரில் 18 பேரும், பவானியில் 9 பேரும், பவானி நகராட்சி அலுவலகத்தில் 5 பேரும் , ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 31 பேரும், கொடுமுடியில் 19 பேரும், மொடக்குறிச்சியில் 20 பேரும், பெருந்துறையில் 26 பேரும், சத்தியமங்கலத்தில் 16 பேரும், தாளவாடியில் 4 பேரும், சூரியம்பாளையம் மண்டல அலுவலகத்தில் 1 விண்ணப்பதாரரும், சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில் ஒருவரும், காசிபாளையம் மண்டல அலுவலகத்தில் 5 பேர் உள்பட மொத்தம் 287 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com