பள்ளிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் விநியோகம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும்

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் விலையில்லா பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில், 2018-19ஆம் கல்வி ஆண்டில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களும், 6ஆம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுகளும் வரப் பெற்றுள்ளன.
இதில், ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய பங்களாப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்தந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
இது குறித்து ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:
ஈரோடு கல்வி மாவட்டத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1 லட்சத்து 26 ஆயிரத்து 234 பாடப் புத்தகங்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 400 நோட்டுகளும் பெறப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்காகப் பெறப்பட்ட 6, 676 பாடப் புத்தகங்களும், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக 6,082 பாடப் புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் மே31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com