சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு

ஈரோடு அருகே உள்ள சம்பத்நகர் - நசியனூர் சாலையில் கூட்டுறவுத் துறை சார்பில், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு

ஈரோடு அருகே உள்ள சம்பத்நகர் - நசியனூர் சாலையில் கூட்டுறவுத் துறை சார்பில், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் புதிய பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி) முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெட்ரோல் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார். 
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு முதல் திண்டல் வரை புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறையைப் பொருத்தவரை 9, 10, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இணையதள வசதியுடன் கணினி வசதி செய்து தரப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
9, 10, 11, 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில்  6, 7, 8 வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ-மெட்ரிக் முறை வழங்கப்படும். கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் 7,944 ச.அடி பரப்பளவில் ரூ. 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். 
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநர் க.பாண்டியன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com