சஞ்சீவிராயன் குளத்தில் மீன் வளர்ப்புக்காக விடப்பட்ட 3 லட்சம் மீன் குஞ்சுகள்

தொட்டகோம்பை மலைப் பகுதியில் பெய்த மழையால் சஞ்சீவிராயன் குளம் நிரம்பியதையடுத்து, மீன் வளர்ப்புக்கு 3 லட்சம் மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன.

தொட்டகோம்பை மலைப் பகுதியில் பெய்த மழையால் சஞ்சீவிராயன் குளம் நிரம்பியதையடுத்து, மீன் வளர்ப்புக்கு 3 லட்சம் மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன.
கள்ளிப்பட்டியை அடுத்த பெருமுகை ஊராட்சியில் சஞ்சீவிராயன் குளம் உள்ளது.  60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் குளத்துக்கு கரும்பாறை, தொட்டகோம்பை உள்ளிட்ட வனப் பகுதியில் பெய்யும் மழை நீர் வந்தடைகிறது. தொடர்ந்து பெய்த மழையால் குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்தக் குளத்தில் மீன் பிடிப்பு தொழில் செய்து வரும் அரசபாளையம் கள்ளிப்பட்டி மீனவர்கள் ஒருங்கிணைந்து மீனவர் கூட்டுறவு சங்கம் ஆரம்பித்து மீன் வளர்த்து வருகின்றனர். தற்போது, நீர் நிறைந்துள்ள இக்குளத்தில் மீனவர் சங்கத்தின் சார்பில் கட்லா, ரோகு, மிர்காள், புல்கெண்டை உள்ளிட்ட வகைகளில் 3 லட்சம் மீன் குஞ்சுகளை மீனவர் சங்கத்தினர் குளத்தில் விட்டனர். 
இந்த மீன்கள் 4 முதல் 6 மாதம் வரையில் 1 கிலோ வரை வளரும். மொத்தம், 20 டன் வரை மீன்கள் கிடைக்கும் எனத் தெரிவித்தனர். இதனால், கீழ்வாணி, அட சப்பாளையம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com