குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் தொடக்கம்

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) நாகரத்தினம் தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார்.
சென்னிமலை குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத் தலைவர் பொன்.ஆறுமுகம், செயலாளர் செ.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு மன்றத்தின் சேவைகள் குறித்துப் பேசினர். அப்போது, பணம் செலுத்தி பொருள் வாங்குபவர்களும், தவணை முறையில் பொருள் வாங்குபவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி செலுத்துவதால், அனைவரும் நுகர்வோர் என்பதால் நுகர்வோரின் கடமைகள் குறித்தும், 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளது என்பது குறித்தும் விளக்கிப் பேசினர். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com