சென்னிமலை ஒன்றியத்தில் ரூ. 1.14 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ. 1 கோடியே 14 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ. 1 கோடியே 14 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், தோப்புபாளையத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி, கூத்தம்பாளையம் ஊராட்சி, கூத்தம்பாளையம் முதல் கரியாம்மடை வரை ரூ. 74 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, வாய்ப்பாடி ஊராட்சி, முருகம்பாளையம் முதல் கவுண்டம்பாளையம் வரை ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, சின்னக்காட்டுபாளையம் முதல் கொளத்துப்பாளையம் வரை ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை, பெரியகாட்டுபாளையத்தில் சாலை அமைக்கும் பணிகளை, சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தொடக்கி வைத்தார்.
மேலும், தோப்புபாளையத்தில் நடைபெற்ற இலவச அரசு பொது மருத்துவ முகாமையும் தொடக்கி வைத்தார். 
முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனர்.  
விழாவில், பெருந்துறை வட்டார சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் குணசேகரன், சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவர் கே.வி.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com