மகாவீரர் ஜயந்தி விரதம் மேற்கொண்டோருக்கு மரியாதை

மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்களை  ஈரோடு மாவட்ட ஜெயின் சமூக மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.

மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்களை  ஈரோடு மாவட்ட ஜெயின் சமூக மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.
மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு 8 நாள்கள்,16 நாள்கள், 31,  36,  45 நாள்கள் என தங்களது விருப்பத்திற்கேற்ப ஜெயின் சமூகத்தினர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு நோன்பிருந்து தங்களது  விரதத்தை  நிறைவு செய்த பக்தர்களுக்கு மரியாதை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி ஈரோடு இந்திரா நகர் ஜெயின் கோயிலில்  நடைபெற்றது.   இதில், நோன்பினை நிறைவுசெய்த பக்தர்களை வாகனத்திலும், குதிரை வண்டியிலும், யாத்திரையாகவும்  மேள வாத்திய இசை முழக்கத்துடன்  அழைத்துச் சென்றனர். இந்த  ஊர்வலம் கடைவீதி, நேதாஜி வீதி, கச்சேரி வீதி, வெங்கடப்ப நாயக்கர் வீதி வழியாக மீண்டும் இந்திரா நகர் ஜெயின் கோயிலில்  நிறைவடைந்தது. 
இந்த ஊர்வலத்தின் மூலம் நோன்பிருந்தவர்கள் தங்களது நோன்பினை ஆண்டுதோறும் கடைப்பிடித்திடும் வகையிலும், மகாவீரர் சுவாமியின் முக்கிய கொள்கையான பிறரைத் துன்புறுத்தக் கூடாது, எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கருத்துக்களை பரப்பும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தபட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com