சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி: முழுவீச்சில் தயாராகி வரும் மைதானம்

தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டிக்காக ஈரோடு வ.உ.சி

தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டிக்காக ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் மைதானங்கள்  முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
அகில இந்திய வீல் சேர் கூடைப்பந்துக் கழகம் நடத்தும், தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகள் ஈரோட்டில் செப்டம்பர் 20 முதல் 23 ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் பிரிவுகளில் 23 அணிகள் பங்கேற்கவுள்ளன. இப்போட்டிகளுக்காக   இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் முழுவீச்சில் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து, போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்துக் கழக ஆலோசகர் மக்கள் ராஜன் கூறியதாவது: 
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 5 ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில்  22 மாநிலங்களைச் சார்ந்த 29 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்காக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சர்வதேசத் தரத்தில் 2 மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் நடைபெற ஒரு மைதானத்தில்  மேற்கூறை அமைக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் வசதிக்காக பிரத்யேகமான 2 ஓய்வு அறைகள் அமைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்குமிடம், உணவு அனைத்தும் வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கவுள்ளதாக
குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com