நீர்மட்டம் குறைந்து வரும் ரேலியா அணை: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

குன்னூரில் உள்ள ரேலியா அணையின் நீர்மட்டம் 3.5 அடியாகக் குறைந்துள்ளதால் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நீர்மட்டம் குறைந்து வரும் ரேலியா அணை: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

குன்னூரில் உள்ள ரேலியா அணையின் நீர்மட்டம் 3.5 அடியாகக் குறைந்துள்ளதால் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

குன்னூர் நகரின் முக்கிய நீர் ஆதாரமான ரேலியா அணையின் மொத்தக் கொள்ளளவு 43.7 அடி.

மழையின்மைக் காரணமாக தற்போது, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. நீர் ஆதாரங்களும் வறண்டு வருகின்றன.

குறிப்பாக ரேலியா அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 3.5 அடியாக உள்ளது.

மழை பெய்தால் மட்டுமே அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க குன்னூர் நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்குப் பல்வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் உதயபானு கூறியதாவது:

குன்னூர் பகுதியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டுமே மழை பெய்யும். இந்தக் காலகட்டம்தான் வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். தற்போதைய காலநிலையில் இந்த மாத இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூர் பகுதியில் சீதோஷ்ணம் குறைந்தபட்ச வெப்பநிலை 14 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை உள்ளது. அதிகபட்சமாக 21 செல்சியஸ் முதல் 22 செல்சியஸ் வரை வெப்பநிலைக் காணப்படுகிறது. தற்போது காற்றில் ஈரப்பதமும் சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக இம்மாத இறுதியில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com