தனியார் பள்ளிகளில் கட்டாய கல்விக்கான மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டாயக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டாயக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தது 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கு w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அத்துடன் மாணவர்களின் நலன் கருதி பின்வரும் அலுவலகங்களிலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உதகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் ஆகியவற்றிலும், குன்னூரில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் ஆகியவற்றிலும், கோத்தகிரியில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்திலும், கூடலூரில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்திலும், பந்தலூரில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய செல்லும்போது குழந்தைகளின் பிறப்புச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் ஆதரவற்றோர், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலரின் சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com