மலைப் பூண்டு கிலோ ரூ. 40-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

மலைப் பூண்டுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மலைப் பூண்டுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்டக் காய்கறிகளான பீன்ஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், காளிஃபிளவர், பட்டாணி, பூண்டு, மேராக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது மஞ்சூர், எடக்காடு, முள்ளிமலை, பி.மணியட்டி, இத்தலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைப் பூண்டு உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பூண்டு 1 கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்: 1 கிலோ பூண்டு விதை ரூ. 150 முதல் ரூ. 200 வரை விலைக்கு வாங்கி பயிரிடப்படுகிறது. இதனால், 1 கிலோ விலைக்கு 10 முதல் 13 கிலோ வரை பூண்டு கிடைக்கும். தற்போது பூண்டில் சருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் சாகுபடிக்கு முன்னதாகவே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ. 150 முதல் ரூ. 220 வரை பூண்டுக்கு விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது ரூ. 50-க்கு குறைவாகதான் விலை கிடைக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com