கூடலூரில் கோடை விழா மே 12-இல் தொடக்கம்

கூடலூரில் கோடை விழா மற்றும் வாசனை திரவியக் கண்காட்சி மே 12-ஆம் தேதி தொடங்குகிறது.

கூடலூரில் கோடை விழா மற்றும் வாசனை திரவியக் கண்காட்சி மே 12-ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 12-ஆம் தேதி தொடங்கும் கோடை விழா 14-ஆம் தேதி இரவு நிறைவு பெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கூடலூர் கோட்டாட்சியர் தினகரன் தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் ஜான் மனோகர் குறிஞ்சி இலக்கிய மன்ற நிறுவனர் கூடலூர் ராமமூர்த்தி, தலைவர் தம்பி ராமசாமி, தமிழ்ச் சங்க நிர்வாகி ஆனந்தராஜா, ரெட் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பென்னி, கே.ஜே.ஆண்டனி, கவிஞர்கள் பேரவையின் வேலூ ராஜேந்திரன், சோ.கந்தசாமி, சமூக ஆர்வலர்கள் சுல்பிகர் அலி, ரோஸ் அறக்கட்டளை நிர்வாகி சுந்தர், ரேன்சம் அறக்கட்டளை நிர்வாகி தினகரன், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயா மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், கோடை விழாவின் மூன்று நாள்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com