திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குன்னூரை தூய்மையான நகராக உருவாக்க திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்      வலியுறுத்தியுள்ளனர்.

குன்னூரை தூய்மையான நகராக உருவாக்க திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்      வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் சேரும் குப்பைகள், ஓட்டுப் பட்டறைக் குப்பைக் குழிப் பகுதியில் கொட்டப்படுகின்றன.
இந்தப் பகுதியில் குப்பையைப் பிரித்தெடுத்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதில், வீடுகள் தோறும் இரு வண்ணங்களில் சிறிய தொட்டிகள் கொடுத்து, மட்கும் குப்பை, மட்காத குப்பையாகப் பிரிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகளைத் தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால், மக்களின் போதிய ஒத்துழைப்பின்மையாலும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பணிகளைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாகவும் நகராட்சியின் பல இடங்களிலும் தொட்டிகள் இல்லாததாலும், சாக்கடைகள், சாலையோரங்களில் மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். நாள்தோறும் வீதிகளில் குப்பையைச் சேரிக்க பணி அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள், பல்வேறு பகுதிகளுக்கு தங்களது தள்ளு வண்டியைக் கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தி குன்னூரை தூய்மையான நகராக உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com