கோடை சீசன்: மலர்த் தொட்டிகளை பராமரிக்கும் பணி தீவிரம்

கோடை சீசனையொட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2,000 தொட்டிகளில் மலர்ந்த பூக்களைப் பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை சீசனையொட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2,000 தொட்டிகளில் மலர்ந்த பூக்களைப் பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்ட ரோஜா, டேலியா, பேன்சி, பெட்டூனியா, சால்வியா உள்ளிட்ட 125 வகைச் செடிகளில், 3 லட்சத்து 60 ஆயிரம் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன. இதைப் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், நடப்பு ஆண்டின் பழக் கண்காட்சி, மே 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக, 25 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆலந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட புதுவகை மலர்களும் இந்த ஆண்டு இடம்பெறும். தற்போது, வெயிலின்
தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், செடிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com