கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் போராட்டம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தங்களைக் கட்டாயப்படுத்திப் பணி வாங்குவதாகக் கூறி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தங்களைக் கட்டாயப்படுத்திப் பணி வாங்குவதாகக் கூறி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்,  ஏழைக் குடும்பத்தினருக்கு வீடு கட்டும் பணியில்,  கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்களைக் கட்டாயபடுத்திப் பணி வாங்குவதாகவும்,  பணி மேற்பார்வையாளர்,  ஊராட்சிச் செயலாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் அதிகாரிகள் நடத்துவதாகவும்,  விருப்பமில்லாத  நபர்களையும்,
வீடு கட்ட கட்டாயப்படுத்துவதாகவும்,  தனி நபர் கழிப்பிடம் கட்டுவதற்கு பொதுமக்களை அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
  ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தில்,  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமன், வட்டக் கிளைத் தலைவர் பாபு, அரசு ஊழியர் சங்கத் தலைவர் அய்யனார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com