மஞ்சூர் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராம மக்கள் அரசுப் பேருந்தை புதன்கிழமை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராம மக்கள் அரசுப் பேருந்தை புதன்கிழமை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஞ்சூர்அருகே காந்திபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்துக்கு தினமும் காலை குன்னூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து தங்காடு முதல் மேட்டுப்பாளையம் வரை மஞ்சூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் இப்பேருந்து தினமும் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து தங்காடு கிராமத்துக்குச் சென்று அங்கேயே நிறுத்தப்பட்டு விடும்.  மீண்டும், மறுநாள் காலை 6.30-க்கு தங்காட்டில் இருந்து புறப்பட்டு பிக்கட்டி வழியாக காந்திபுரம் கிராமத்துக்குச் சென்று, அங்கு பயணகளை ஏற்றி கொண்டு, மீண்டும் தொட்டக்கம்பை, மஞ்சூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்தப் பேருந்து தங்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பிக்கட்டி வழியாக மேல்குந்தா கிராமத்துக்குச் சென்று மீண்டும் காந்திபுரம் சென்று அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு, தொட்டக்கம்பை, மஞ்சூர் வந்து மேட்டுப்பாளையம் சென்று வருகிறது.
இதனால், காந்திபுரம் கிராமத்தில் இருந்து பேருந்து பயணம் செய்வோருக்கு இருக்கைகள் கிடைக்காமல் அவர்கள் நின்றுகொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கிளை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்வில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் எஸ்.சி, எஸ்.டி. சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் சின்னான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு புதன்கிழமை காலை காந்திபுரம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த பேருந்தை சிறைபிடித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது, கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com