"வனக் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்'

நீலகிரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் வனக் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் வனக் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 2 வனக் கோட்டங்கள் உள்ளன. இதில்,  14 வனச் சரகங்கள் அடங்கியுள்ளன. மாவட்ட வன அலுவலர்கள், வனச் சரகர், வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் வன ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
வனத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும்.  வனச் சரகர்களுக்கு உதவி வனப் பாதுகாவலராகவும்,  வனவர்களுக்கு வனச் சரகர்களாகவும், வனக் காப்பாளர்களுக்கு வனவராகவும்,  வனக் காவலர்களுக்கு வனக் காப்பாளர்களாகவும்,  வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு வன காவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.  இதன்படி இந்த ஆண்டு,  வனத் துறையினருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வனக் காப்பாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படமால்,  நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனக் காப்பாளர்கள் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வனக் காப்பாளர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனவர்களாகப் பதவி உயர்வு வழங்கப்படும். சமவெளிப் பகுதிகளில் உள்ள சமூக வனக் காடுகளில் வனக் காவலராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள்,  தங்களுக்கு 10 ஆண்டுகள் பணிமூப்பு அடிப்படையில் வனவருக்கான பதவி உயர்வு தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால், மலைப் பிரேதசங்களில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வருபவர்களுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.  
இதுகுறித்து மாவட்ட முதன்மை வனப் பாதுகாவலர் உரிய விசாரணை நடத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com