சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய இப்பேரணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சிவகுமார் தலைமை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் ஜி.கதிரவன், பாரதியார் பல்கலைக் கழக கலைக் கல்லூரி முதல்வர் பழனிசாமி, அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் முத்துமாணிக்கம் பேரணியைத் துவக்கி வைத்தார்.
நாட்டு நலப் பணித் திட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கார்த்திக்,சிவசங்கரன், மேரிசுஜி, ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், கிராம,  நகராட்சி சுயஉதவிக் குழுக்கள், சத்துணவுப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நகரின் முக்கியச் சாலைகள் வழியாக சென்ற பேரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. அங்கு சுகாதார விழிப்புணர்வு குறித்த குறும்படம்,  கருத்தரங்கு நடைபெற்றது.
மஞ்சூரில்...:  மஞ்சூரில் ஆண்கள்,  பெண்கள் அரசுப் பள்ளிகள் சார்பில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கீழ்குந்தா செயல் அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இதில்,  வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டுவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com