எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: உதகையில் படகுப் போட்டி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி,  உதகையில் வெள்ளிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி,  உதகையில் வெள்ளிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
 உதகையில்,  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் 11-இல் நடைபெற உள்ளது.  தமிழக அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால்,  இதற்காக  அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  சுற்றுலாத் துறை சார்பில் உதகையில் வெள்ளிக்கிழமை துடுப்புப் படகுப் போட்டி நடத்தப்பட்டது.  இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கிவைத்தார்.
படகுப் போட்டியில் பங்கேற்றோர்,  படகோட்டி திரைப்படத்தில் எம்ஜிஆர் அணிந்திருந்த உடையைப் போலவே,   உடையணிந்திருந்தனர்.  இப்போட்டியில், உதகையைச் சேர்ந்த தீனதயாளன் முதலிடத்தையும்,  சுரேஷ் இரண்டாமிடத்தையும்,  கமலக்கண்ணன்
மூன்றாமிடத்தையும் பெற்றனர்.     இந்நிகழ்ச்சியின்போது,  எம்ஜிஆர் வேடமணிந்த 30-க்கும் மேற்பட்டோர், அங்கு ஒலிபரப்பப்பட்ட எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களுக்கு ஏற்றவாறு நடன அசைவுகளுடன்,படகு இல்லத்தை சுற்றிலும் வலம் வந்தனர்.
 சுற்றுலாத் துறை மண்டல மேலாளர் முரளி,  மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன்,  படகு இல்ல மேலாளர் தினேஷ்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com