ராணுவ மையத்தைப் பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்

பிராவின்ஸ் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள், வெலிங்டன் ராணுவ மையத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.

பிராவின்ஸ் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள், வெலிங்டன் ராணுவ மையத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
  ராணுவ முகாமில்,  பல்வேறு காலக்கட்டத்தில் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடிகள், அரிய புகைப்படங்கள், படைக் கருவிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனியாரின் நீலகிரி வருகை குறித்தும்,  மைசூர்,  மராட்டியப் போர்கள்,  போர்க் களத்தில் இன்னுயிர் நீத்த வீரர்கள் குறித்தும் மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
  பழங்கால போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அப்போதைய ராணுவ வீரர்கள் அணிந்திருந்த உடைகள், அவர்கள் பயன்படுத்திய பல்வேறு உபகரணங்கள் இடம்
பெற்றுள்ள அருங்காட்சியகத்தையும் மாணவிகள் பார்வையிட்டனர்.  ராணுவ வீரர்கள், வரலாற்றுத் துறை பேராசிரியர்கள்,  மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com