நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டு

தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பணியாற்றிதற்காக தமிழக அரசின் விருது பெற்ற நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க

தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பணியாற்றிதற்காக தமிழக அரசின் விருது பெற்ற நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கோத்தகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சார்பில், கோத்தகிரியில் 18 பழங்குடியினருக்கான பகல் நேர காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 480 தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிறுவனம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும்,  25 தோடர் மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து,  131 பிரத்யேக மகளிர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.  இக்குழுக்கள் மூலம்,  தோடரின் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் மண்பாண்டம் உற்பத்தி செய்து,  சந்தைப்படுத்துதல், 10 சிறு தேயிலை வளர்ப்போர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு சிறந்த பணியை மேற்கொண்டு வரும் நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்துக்கு,  சுதந்திர தின விழாவில்  மாநில அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.
இந்நிலையில்,  கோத்தகிரியில் இயங்கி வரும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நிர்வாகியான ஆல்வாஸ் உள்ளிட்டோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,  புஷ்பகுமார் உள்பட  நாவா அலுவலர்கள்,  ஆம்ஸ்ட்ராங் நினைவு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com